தமிழக செய்திகள்

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

4 நாட்களுக்கு, 224.64 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அமராவதி அணையில் இருந்து 4 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து, ஆற்று மதகு வழியாக, தாராபுரம் நகராட்சியின் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் 19.06.2026 முதல் 23.06.2026 முடிய 4 நாட்களுக்கு, 224.64 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.