கோவை,
கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்குட்பட்ட நிலங்களுக்கு, இரண்டாம் போக பாசனத்திற்காக, 24.10.2025 முதல் 15.04.2026 முடிய, ஆழியாறு அணையிலிருந்து தொடர்ந்து 173 நாட்களுக்கு 1143 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், கோவை மாவட்டம், ஆனைமலை வட்டத்திலுள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும். இதனை தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.