தமிழக செய்திகள்

மருத்துவ கல்லூரிகளில் 500 நர்சிங் இடங்களை தொடங்க தமிழக அரசு திட்டம்

14 மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங் படிப்பு தொடங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை,

அரசு மருத்துவ கல்லுாரிகளில், 1,500 பி.எஸ்சி., நர்சிங் இடங்களை தொடங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் ஆறு மருத் துவ கல்லுாரிகளில், 510 பி.எஸ்சி., நர்சிங் இடங்கள் உள்ளன. இங்கு ஆண்டிற்கு, 13,750 ரூபாய் கல்விக் கட் டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 1.20 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, தி.மு.க., ஆட்சியிலேயே, 10 மருந்தியல் மற்றும் நர்சிங் கல்லுாரிகளை தொடங்க, தமிழக அரசு பூர்வாங்க பணியை தொடங்கியது. ஆனால், அவற்றை செயல்படுத்தவில்லை.

இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு, மருந்தியல் மற்றும் நர்சிங் கல்லுாரிகளை அதிகப்படுத்த, முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வேலுார், திருவண்ணாமலை, தர்மபுரி, திருநெல்வேலி, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட 14 மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர் சிங் படிப்பு தொடங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, மருத்துவ கல்வி இயக்க அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு இணையாக, துணை மருத்துவ படிப்புகளையும் அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 700க்கும் மேற்பட்ட மருந்தியல் படிப்புகள், 1,500 பி.எஸ்சி., நர்சிங் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான உட்கட்டமைப்பு, பேராசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பணிகள் நடக்க இருப்பதால், இவை அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.