தமிழக செய்திகள்

5 ஆண்டுகளுக்கு 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு நடவடிக்கை

மின்சார தேவைக்காக குறுகிய கால மின்சார கொள்முதலுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு (2027) ஜனவரி முதல் ஜூன் மாதத்தில் கோடைகால மின்சார தேவைக்காக குறுகிய கால மின்சார கொள்முதலுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

அதில் ஒரு யூனிட் ரூ.9.50 முதல் ரூ.13 வரை விலைப்புள்ளிகள் பெறப்பட்டுள்ளது. ஒரு யூனிட் ஜனவரியில் ரூ.13-க்கும், பிப்ரவரியில் ரூ.9.50-க்கும். மார்ச், ஏப்ரலில் தலா ரூ.10-க்கும். மே மாதத்தில் ரூ.9.95-க்கும், ஜூன் மாதத்தில் ரூ.13-க்கும் மின்சாரம் கொள்முதல் செய்யப் பட இருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் சமூகவலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் 5 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் மின்சார வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மின் பாதுகாப்பை நீண்டகால அடிப்படையில் உறுதிப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT