சென்னை,
நம்பிக்கையானவருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் பேசி இருப்பதாவது;
இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. வெங்கடநாராயணா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்ல. கர்நாடக தலைநகர் பெங்களூரில் இருந்து தொழில் செய்து வருகிறார். அவர் ஆந்திராவை சேர்ந்தவர். டெல்லிக்கான பிரதிநிதியாக இருக்கப் போகிறார். பெரிய முடிவுகளை எடுக்கப்போவதில்லை. முக்கியமான விசயம் என்னவென்றால், கடினமான நேரத்தில் மிகவும் உறுதியாக நின்றவர். மிகவும் நம்பிக்கையானவர். தவறான நபருக்கு அந்த பொறுப்பு வழங்கப்படவில்லை. கடந்த காலத்தில் பல அழுத்தங்கள் அவருக்கு வந்தன.
முதல்-அமைச்சர் விஜய் மற்றும் எங்கள் மீது பல குற்றச்சாட்டுகளை கூற அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. அதையெல்லாம் தாண்டி உறுதியாக நிற்பவர். அவர் பெரிய முடிவுகளை எடுக்கப்போவதில்லை. ஒப்புதல் கொடுக்கப்போவதில்லை. மத்திய மற்றும் தமிழ்நாட்டுக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கப் போகிறார். டெல்லியில் பிறந்தவர்கள், அங்கே இருந்தவர்களையெல்லாம் போட்டிருக்கிறார்கள்.
இந்த பொறுப்பு முதலில் அலங்காரமாக இருந்தது. எம்.எல்.ஏ., மக்களவை தேர்தலில் தோற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டது. தற்போது நம்பிக்கையானவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பணம் பெரிய விசயம் கிடையாது. இந்த பொறுப்புதான் பெரிய விசயம் கிடையாது. நம்பிக்கையானவர்.