சென்னை,
தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட தகவலாக சளி தொந்தரவு காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 2 நாட்களுக்கு பிறகு ராஜ் பவனுக்கு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் கவர்னர் அர்லேகருக்கான சிகிச்சை விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.