தமிழக செய்திகள்

மாநில மக்களுக்கு ஒடிசா தின வாழ்த்து: தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

ஒடிசா மாநில மக்களுக்கும் உலகம் முழுவதும் வாழும் ஒடியா மொழி பேசும் சகோதர சகோதரிகளுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என தமிழக ஆளுநர் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

உத்கல் தினத்தை முன்னிட்டு, ஒடிசா மாநில மக்களுக்கும் உலகம் முழுவதும் வாழும் ஒடியா மொழி பேசும் சகோதர சகோதரிகளுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.1936ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் நாள், ஒடியா மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒடிசா தனி மாநிலமாக உருவானது.

இந்திய வரலாற்றில் முக்கியமான ஒரு மைல் கல்லாகும். இந்த வெற்றிக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுசூதன் தாஸ் மற்றும் கோபபந்து தாஸ் போன்ற தலைவர்களின் தன்னலமற்ற சேவையும், தொலைநோக்கு பார்வையும் நினைவுகூரத்தக்கவை.

உத்கல் தினம், ஒற்றுமை, விடாமுயற்சி மற்றும் பண்பாட்டு பெருமையை எடுத்துக்காட்டும் நாளாக விளங்குகிறது. இந்தியாவின் மொழி மற்றும் பண்பாட்டை மதிக்கும் பயணத்தில் இதுவும் ஒரு முக்கிய அத்தியாயமாகும்.

இந்த சிறப்பான நாள், ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தின் உயரிய இலக்குகளை நாம் அனைவரும் அடைய ஊக்கமாக இருக்கட்டும். வலுவான, வளமான மற்றும் முன்னேற்றமிக்க இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வாழ்த்துகிறேன்.