தமிழக செய்திகள்

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்; தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பல்வேறு மூத்த ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்து வருகிறது.

இந்நிலையில், தமிழக உள்துறை செயலாளராக செயல்பட்டு வந்த தீரஜ்குமார் மாற்றப்பட்டுள்ளார். புதிய உள்துறை செயலாளராக மணிவாசனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மணிவாசன் ஐஏஎஸ் இன்றே பதவியை ஏற்றுக்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர், லஞ்சம் ஒழிப்பு டிஜிபி உள்பட முக்கிய அதிகாரிகளை ஏற்கனவே தேர்தல் ஆணையம் மாற்றம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

GE To LA Of TN, 2026- TransferPosting Of Officers In State Of Tamil Nadu.pdf
Preview