திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்; சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது. மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான்.
காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது. வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன. த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.
தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை? சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.