ஈரோடு,
ரஷ்யாவில் வரும் ஜூலை மாதம் 10 ஆம் தேதி உலகக் கோப்பை சதுரங்கப் போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரரை தேர்வு செய்வதற்கு, இந்திய சதுரங்க கூட்டமைப்பு சார்பில் ஆன்லைனில் போட்டி நடந்தது. இதில் முன்னனி சதுரங்க வீரர்கள் பலர் பங்கேற்ற நிலையில், தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரும், சதுரங்க வீரருமான இனியன் கலந்து கொண்டார்.
இதில் சிறப்பாக விளையாடிய இனியன் 12.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை சதுரங்கப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அவர் உலகக் கோப்பை தொடரில் தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.