தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

சென்னை,

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, கார்த்திகை தீபத்திருனாளான நாளை மறுதினம் தீபத்தூணில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தமிழக அரசு சீராய்வு மனு

இந்நிலையில், தீபத்தூணில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து ஆன்லைன் மூலமாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த சீராய்வு மனு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT