சென்னை,
உலக ஸ்கேட்டிங் போட்டியில் தமிழக வீரர் தங்கம் வென்று சாதனை படைத்ததற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
பராகுவே நாட்டில் நடைபெற்றுவரும் World Skate Games 2026 போட்டி - 'Men's Marathon' பிரிவில், இந்தியாவுக்காகத் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ள தமிழக வீரர் ஆனந்த் வேல்குமாருக்கும், 'Junior Women Relay Race' பிரிவில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ள தமிழக வீராங்கனையர்கள் லக்ஷிதா சிந்து, ருத்வா பிரகாஷ், பிரகதி சிவபாலன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்கனவே இதே தொடரில் 'Speed Skating 1000m Race' பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 'Men’s 500m Sprint' பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற ஆனந்த் வேல்குமார், மொத்தம் மூன்று பதக்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
ஆனந்த் வேல்குமார் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் Elite திட்டத்திலும், லக்ஷிதா சிந்து மற்றும் ருத்வா பிரகாஷ் ஆகிய இருவரும் Champions Development Scheme திட்டத்திலும் பயன்பெற்று வருகிறார்கள்.
நம் வீரர் - வீராங்கனையர்கள் தங்கள் சிறப்பான விளையாட்டின் மூலம் இந்திய நாட்டின் சிறப்பையும் தமிழ்நாட்டின் திறனையும் உலக அரங்கில் நிலைநாட்டியிருக்கிறார். தமிழக இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருந்து, அவர்கள் எதிர்காலங்களில் மேலும் பல உலக சாதனைகள் படைக்க எனது பாராட்டுகள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.