சென்னை,
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேபாளில் உள்ள ரங்கசாலா - போக்ரா என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற 25 மாணவ மாணவிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று (22.5.2026), காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், மே-10 அன்று இந்தோ - நேபாள் சிலம்பம் போட்டிக்கு தேர்வு பெற்று, நேபாளில் உள்ள ரங்கசாலா - போக்ரா என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் 29 தங்க பதக்கங்கள் மற்றும் overall சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த சென்னை மாவட்டம் மாணவ மாணவிகள் அரும்பாக்கத்தை சேர்ந்த சிலம்பம் மாஸ்டர் ஆர்.கார்த்திக் தலைமையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.