தமிழக செய்திகள்

ஜனாதிபதியிடம் விருது பெற்ற தமிழக ஆசிரியர்கள் - வானதி சீனிவாசன் வாழ்த்து

நல்லாசிரியர் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ஜ.க. முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“இன்று தலைநகர் டெல்லியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவால் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதாவுக்கும் மற்றும் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் தங்கராஜுக்கும் மற்றும் இதர ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

மேலும், இவ்விழாவில் 'தரமான கல்வியின் மூலமே வளர்ச்சியடைந்த பாரதம் சாத்தியமாகும்' என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேசத்தின் எதிர்கால தலைமுறையை உருவாக்குவதில் ஆசிரியர்களின் மகத்தான பங்கினையும் எடுத்துரைத்ததை மனதில் நிறுத்தி தங்களின் உன்னத கல்விப் பணியை சிறந்த முறையில் மென்மேலும் தொடர்ந்து கல்லாமை என்னும் இருளை அகற்றி அறிவொளி ஏற்றிட வாழ்த்துகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT