சென்னை,
முதல்-அமைச்சர் விஜயை தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, 2026 சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (WTA-250) போட்டியை சென்னை நகரில் நடத்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ், முதன்மைச் செயல் அலுவலர் ஹில்டன் ஜோஷி, போட்டி ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் மற்றும் கௌரவ செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, போட்டிக்கான ஏற்பாடுகள் மற்றும் தமிழக அரசின் ஒத்துழைப்பு குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.