சென்னை,
தேமுதிக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
“கடந்த காலங்களில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.3-க்கு கென்முதல் செய்த நிலையில், மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில் தற்போது ஒரு யூனிட் மின்சயந்தைத் தனியனிடம் இருந்து ரூ.35க்கு கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் ஏன்? தமிழ்நாடு எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்ற கேள்வியை இன்று மக்கள் எழுப்பி வருகின்றனர்.
ஒருபுறம் மின்வெட்டு, மறுபுறம் மின்கட்டண உயர்வு மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில், தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சரத்தை ரூ.35 என்ற அதிக விலைக்கு வாங்குவது எந்த வகையில் நியாயமானது? இதற்குத் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். ஏற்கனவே மின்சாரத் துறை கடனில் இருக்கும் நிலையில், தமிழ்நாடு சுமார் ரூ.10 லட்சம் கோடி கடனில் இருப்பதாக கூறப்படும் சூழவில், தனியாரிடம் தொடர்ந்து அதிகயை கொடுத்து மின்சாரம் வாங்குவதன் மூலம் மேலும் நிதிச்சுமையை ஏற்படுத்துவது எதற்காக? இந்தக் கொள்முதல் நடவடிக்கையின் அவசியம், விலை நிர்ணயம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்களை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். உற்பத்தித் திட்டங்களை முன்னெடுப்பதை விடுத்து, மின்கட்டணத்தை உயர்த்துவதும், மின்வெட்டுக்கு வழிவகுப்பதும், தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதும் மக்களின் சுமையை மேலும் அதிகரிக்கும். மக்களின் வரிப்பணத்தையும், மாநிலத்தின் நிதிநிலையையும் கருத்தில் கொண்டு, மின்சார உற்பத்தியைப் பெருக்கி, நியாயமான விலையில் தடையற்ற மின்சாரம் வழங்குவதே அரசின் கடமையாகும்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.