தமிழக செய்திகள்

தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் 5 சதவீதம் வீழ்ச்சி; தங்கம் தென்னரசு அறிக்கை

17 சதவீதம் பிந்தைய வருவாய் உயர்வை காட்டி குழுப்புவது உண்மையை மறைக்காது என தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் 5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் தவெக அரசு பதில் சொல்ல வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மூன்று மாதங்களாகத் தொடர்ந்து சரியும் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய், செப்டம்பரில் மட்டும் 5% வீழ்ச்சியடைந்துள்ளது!

ஒரு மாநிலத்தில் வசூலிக்கப்படும் மொத்த ஜிஎஸ்டி என்பது, அதன் மொத்த பொருளாதார நடவடிக்கைகளை பிரதிபலிப்பதாகும். எனவே, மாநிலத்திற்குள் நடைபெறும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிவர்த்தனைகள் தொடர்ந்து குறைவது குறித்தும், உள்நாட்டு பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்தும் இதனால் முக்கியமான கேள்விகள் எழுகின்றன.

வரி விகிதக் குறைப்புக்குப் பிறகும் இந்தச் சரிவு தொடர்கிறது. ஆனால், உண்மையான பொருளாதார நிலையைப் பேசாமல் 'Post Settlementக்குப் பிறகு 17% உயர்வு ஏற்பட்டுள்ளது என்ற கணக்கை மட்டும் முன்வைத்து சமூக வலைதளங்களில் பல காணொளிகளைக் கொண்டு சிலர் இதை நியாயப்படுத்தி வருகின்றனர்.

17% பிந்தைய வருவாய் உயர்வைக் காட்டிக் குழப்புவது உண்மையை மறைக்காது. மாநிலத்திற்குள் வரி வசூல் ஏன் தொடர்ந்து குறைகிறது என்பதற்கு பதில் சொல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் இறக்குமதி மூலமாகவும் பெறப்படும் பொருட்கள் மீதான IGST வருவாய் எண்ணிக்கையைக் காட்டுவது எந்த வகையிலும் நமது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி நிலைக்கான முழுமையான விளக்கம் அல்ல!

வருவாய் எண்ணிக்கைகளில் விளையாடுவதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது என்பதற்கு தவெக அரசு பதில் சொல்ல வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT