தமிழக செய்திகள்

3 கணவர்களை ஏமாற்றி விட்டு 4-வதாக வாலிபருடன் ஓட்டம்...! உல்லாசத்திற்கு இடையூறு செய்த குழந்தை அடித்து கொலை

கர்நாடகாவில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்தது. அங்கு சென்று சுற்றிவளைத்து 2 பேரையும் கைது செய்தனர்.

சேலம்

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே புதூர்காடம்பட்டியில் தங்கி, செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார் மல்லேஷ். அதே சூளையில் சக்திவேல் என்பவர் வேலை செய்து வந்தார். சக்தி வேல் சத்தியமங்கலம், புதுவடவள்ளியை சேர்ந்தவர் இவருக்கு கல்யாணமாகிவிட்டது. மனைவி பெயர் கலைவாணி (27) இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த் நிலையில் கலைவாணியுடன் மல்லேஷூக்கு பழக்கம் ஏற்பட்டு, அதுவே கள்ளகாதலாக மாறியிருக்கிறது. 2 பேரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் மல்லேசுவை பிரிந்து கலைவாணியால் இருக்க முடியவில்லை.

அதனால், ஒரு வயது கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு, கலைவாணி மல்லேஷூடன் ஓடிவிட்டார். இருவரும் ஓமலூர் அருகே புதூர்காடம்பட்டியில் புது வாழ்க்கையை தொடங்கி உள்ளனர். அங்கிருந்த ஒரு செங்கல் சூளையில், தம்பதி என்று சொல்லி வேலைக்கும் சேர்ந்துள்ளனர்.

நாளாக நாளாக, கலைவாணியின் குழந்தையின்மீது மல்லேஷூக்கு வெறுப்பு வந்தது. வேறு ஒருவருக்கு பிறந்த குழந்தையை, தன்னால் வளர்க்க முடியாது என்று மல்லேஷ் கூறி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, 2 பேருமே சேர்ந்து மது அருந்தி உள்ளனர். பிறகு உல்லாசமாகவும் இருந்துள்ளனர். அப்போது குழந்தை திடீரென அழுதுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த 2 பேரும், அந்த குழந்தையை ஈவிரக்கமில்லாமல் சுவற்றில் தூக்கி அடித்துள்ளனர்.

இதில், குழந்தை படுகாயமடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.. ஆனால், மறுநாள்தான், குழந்தையை ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தூக்கி சென்று கவலைக்கிடமாகிவிட்டது.உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், குழந்தை நேற்று இறந்துவிட்டது. தாரமங்கலம் போலீசாருக்கு இது சம்பந்தமாக தகவல் தரப்பட்டது..

ஆனால், அதற்குள் இந்த கள்ள ஜோடி தலைமறைவாகிவிட்டனர். இறுதியில், போலீசார் கர்நாடகாவில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்தது. அங்கு சென்று சுற்றிவளைத்து 2 பேரையும் கைது செய்தனர். இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால், கலைவாணிக்கு ஏற்கனவே 3 கணவர்களாம். 4வதாக வாக்கப்பட்டவர்தான் இந்த மல்லேஷ்.

 கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த சமபவம் இது...!

கண்ணை மறைத்த கள்ளக்காதல்...! பாலில் விஷம் கலந்து குழந்தைகள் கொலை

சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). இவரது மனைவி அபிராமி (25). தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் உள்ளனர்.

அபிராமிக்கும், பிரபல பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் (25) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நெருக்கம் ஏற்பட்டது. இது இருவீட்டாருக்கும் தெரிந்த காரணத்தால் இருவரையும் கண்டித்துள்ளனர். இருப்பினும் கள்ளக்காதல் கண்ணை மறைத்த காரணத்தால் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய தாய் அபிராமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டு உள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து தரப்பிலும் விசாரணை நடந்து முடிந்துள்ளதாக தெரிகிறது. அபிராமி மீது குற்றம் நிரூபணமாகி உள்ளதால், தீர்ப்பு விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள். ஆனால், இப்போதுவரை தீர்ப்பு எதுவும் வரவில்லை.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...