தமிழக செய்திகள்

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக தமிழரசன் நியமனம்

கமலக்கண்ணன் அண்மையில் தவெகவில் இணைந்த நிலையில் புதிய செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தி.மு.க.வில் தொ.மு.ச. பேரவை, அ.தி.மு.க.வில் அண்ணா தொழிற்சங்கம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் சி.ஐ.டி.யூ., இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இது போன்று பல்வேறு அரசியல் கட்சிகளில் தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டு மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக தமிழரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்த கமலக்கண்ணன் அண்மையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் புதிய செயலாளராக தமிழரசனை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளராக, பெல் இரா.தமிழரசன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவர் தொழிற்சங்க பணிகளை மேற்கொள்வார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT