தமிழக செய்திகள்

மேற்காசிய போரால் தார் தட்டுப்பாடு: சாலைகள் அமைப்பதில் சிக்கல்

தார் விலை ஒரு டன்னுக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை உயர்ந்துள்ளது.

சென்னை,

மேற்காசிய போர் பதற்றச் சூழல் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் கிடைப்பதில் பிரச்சினை இருக்கிறது. இந்த கச்சா எண்ணெய் வரத்து குறைவு பல்வேறு விஷயங்களில் பிரதிபலித்து வருகிறது.

கச்சா எண் ணெய்யை வெப்பப்படுத்தி அதில் இருந்து சில பொருட்கள் பிரித்தெடுத்த பிறகு, அடிப்பகுதியில் தங்கும் கருமையான, அடர்த்தியான, கெட்டியான கழிவுப் பொருளான 'பிடுமென்' என்று கூறப்படும் தார் கிடைக்கிறது.

அந்த வகையில் கச்சா எண்ணெய் வரத்து குறைவால், தார் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. தட்டுப்பாட்டால் அதன் விலையும் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார் விலை ஒரு டன்னுக்கு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரை இருந்த நிலையில், தற்போது ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை உயர்ந்துள்ளது.

தார் விலை உயர்வால், ஏற்கனவே சாலை அமைக்க ஒப்பந்தம் செய்திருந்த ஒப்பந்ததாரர்கள் தார் தட்டுப்பாடு, விலை உயர்வால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர். இதனால் தமிழ்நாட்டில் சில இடங்களில் தார் சாலை அமைப்ப தில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. சென்னையில் சர்தார் படேல் சாலைப் பணி கிடப்பில் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் எனவும் கூறப்படு கிறது.