தமிழக செய்திகள்

தாராபுரம் இடைத்தேர்தல்: தயார் நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் - கலெக்டர் ஆய்வு

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

திருப்பூர்,

தாராபுரம் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இடைத்தேர்தல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்டு, சுயேட்சைகள் என பல வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

2 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைய உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 9ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கலெக்டர் ஆய்வு

இந்நிலையில், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை திருப்பூர் கலெக்டர் இன்று ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை மாவட்ட கலெக்டர் இன்று நேரில் ஆய்வு செய்தார். மேலும், இடைத்தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT