சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ஆ. கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் இன்று காலை 11.00 மணியளவில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சங்கரலிங்கம் மற்றும் உபதி சிவன் ஆகியோர் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில், பொதுவெளியிலும் ஊடகங்களிலும் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாகப் புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி சார்பில் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் கிடைத்த 10 நாட்களுக்குள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.