சென்னை,
'டாஸ்மாக்' மதுக்கடைகளில் விற்பனை விலையை விட பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க, 'டிஜிட்டல்' பணப்பரிவர்த்தனையை படிப்படியாக முழுமையாக அமல்படுத்த த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி முதல்கட்டமாக சென்னை வடக்கு, தெற்கு, மத்தியம் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டங்களில் ரூ.1,000-க்கு மேல் மதுபானங்கள் வாங்குவோரிடம் ரொக்கமாகப் பணம் பெறாமல், பி.ஓ.எஸ். டிவைஸ் கருவியைப் பயன்படுத்தி 'டெபிட்', 'கிரெடிட்' கார்டு அல்லது யு.பி.ஐ. 'ஸ்கேன்' மூலம் பணம் பெற இன்று (திங்கட்கிழமை) முதல் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.ஓ.எஸ். கருவிகளில் ஏற்கனவே நிலவி வரும் 8 வகையான தொழில்நுட்பக் குளறுபடிகளுக்கு முதலில் தீர்வு கண்டு, பணியாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகே புதிய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.