தமிழக செய்திகள்

டாஸ்மாக் பணியாளர்கள் நாளை முதல் தொடர் காத்திருப்பு போராட்டம்

மாநில பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை,

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட் டம் திருச்சியில் நேற்று மாநில துணைத்தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் கோதண்டம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செயல் தலைவர் பழனி பாரதி சிறப்புரையாற்றினார்.

அவர் கூறியதாவது:- டாஸ்மாக் நிறுவனத்தில் 23 ஆண்டுகளாக 24 ஆயிரம் டாஸ்மாக் பணியா ளர்கள் சமூக பாதுகாப்பு இன்றி குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம். தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தியதன் விளைவாக, எங்களது பிரதான கோரிக்கைகள் குறித்து அமைச்சர் மற்றும் உள்துறை செய லாளர் தலைமையில் கமிட்டி அமைத்து 4 மாத காலத்திற்குள் கமிட்டி முடிவுகளை நிறைவேற்றி தருவதாக பேச்சுவார்த்தையில் தெரிவித்தனர்.

ஆனால் நேற்று டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கமிட்டி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் டாஸ்மாக் பணியாளர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். எனவே மார்ச் 7-ந்தேதி (நாளை) முதல் சென்னையில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் திருச்சி மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார். கூட்டத்தில் மாநி லம் முழுவதிலும் இருந்து அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.