தமிழக செய்திகள்

டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை - அமைச்சர் விக்னேஷ்

பாட்டில்களை திருப்பி வழங்குவதற்கான கட்டண நடைமுறையே கொண்டுவரப்பட்டுள்ளது என அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் மதுபாட்டில்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணமாக ரூ.10 விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நவம்பர் 1-ந்தேதி முதல் மதுபாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலை (எம்.ஆர்.பி.) ரூ.10 உயர்கிறது.

இந்த கட்டண உயர்வு பீர், ஒயின், வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மதுபானங்கள் என அனைத்து வகை மதுபானங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படவில்லை என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

விலை உயர்த்தப்படவில்லை

மதுபாட்டில்களின் எம்.ஆர்.பி. விலையில் சேர்க்கப்படும் ரூ.10, காலி பாட்டிலை திருப்பி ஒப்படைக்கும்போது நுகர்வோருக்கு மீண்டும் வழங்கப்படும். பாட்டில்களை திருப்பி ஒப்படைக்காதவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகை அரசுக்கு சேரும்.

தற்போது விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களில் 60 சதவீதம் மட்டுமே திரும்ப ஒப்படைக்கப்படுகின்றன. மீதமுள்ள 40 சதவீத பாட்டில்கள் திரும்ப வருவதில்லை.

எனவே, மதுபானங்களின் விலை உயர்த்தப்படவில்லை. பாட்டில்களை திருப்பி வழங்குவதற்கான கட்டண நடைமுறையே கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT