சென்னை,
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ரத்தீஷுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் ரூ. 1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன், முன்னாள் அதிகாரிகள் டி.ராமதுரை முருகன், ஆர்.பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர், ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரரான ரத்தீஷ் ராஜ் சண்முகவேல், எஸ்.கார்த்திக் (எ) முலனூர் கார்த்திக் ஆகிய 7 பேர் மீது ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
ரத்தீஷ் ராஜ் டாஸ்மாக் நிர்வாகத்தில் அங்கீகரிக்கப்படாத இடைத்தரகராக செயல்பட்டு, மதுபான பிராண்ட் அனுமதி, பார் உரிமங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள், அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்டவற்றில் செல்வாக்கு செலுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தேஷ் ராஜ் வெளிநாடு தப்பியோடிவிட்டார்.
அதேவேளை, டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரியின் சகோதரர் ரத்தீஷ் ராஜ்-க்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். தலைமறைவாக ரத்தீஷ் ராஜ் இந்தியா வந்ததும் கைது செய்ய கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ரத்தீஷ் ராஜ்-க்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரூ. 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தலைமறைவாக உள்ள ரத்தீஷ் ராஜ்-க்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரத்தீஷ் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அந்த வழக்கில் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரத்தீஷ் தொடர்பான ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச காவல்துறையான இன்டர்போல் விடுத்துள்ளது. ரத்தீசை எந்த நாட்டிலாவது காண்டால் அவரை அந்த காவல்துறை கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.