தமிழக செய்திகள்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

காந்தி ஜெயந்தி அன்று சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டால் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை,

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்களை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகள்

அதன்படி, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் விதிகள் 2003-ன் கீழ் டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள பார்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மூடவேண்டும்.

அன்றைய தினம் அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3 ஏ.ஏ. உரிமையாளர்கள், எப்.எல்.11 உரிமம் பெற்ற கடைகள் மற்றும் பார்கள் ஆகியவை முழுவதுமாக மூடப்படவேண்டும்.

காந்தி ஜெயந்தி அன்று சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டால் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT