தமிழக செய்திகள்

தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடக்கம்

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த ஜூன் 18ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட சட்டசபை நாளை கூட உள்ளது.

சட்டசபையில் 2026-27ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தவெக அரசு நாளை தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடக்கம்

இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் நாளை தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் சட்டசபையில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.