தமிழக செய்திகள்

‘ஆசிரியர்கள் பணி நேரத்தில் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது’ - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

உணவு இடைவேளை நேரத்திலும் பள்ளி வளாகத்தை விட்டு ஆசிரியர்கள் வெளியே செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான இடைவேளை நேரத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி நேரத்தில் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது. பள்ளி வேலை நேரம் மட்டுமின்றி உணவு இடைவேளை நேரத்திலும் பள்ளி வளாகத்தை விட்டு ஆசிரியர்கள் வெளியே செல்லக்கூடாது.

பள்ளி சூழலில் அசாதாரண நிகழ்வுகள் நடந்தால் அதனை தலைமை ஆசிரியர்கள் கண்டிப்பாக உயர் அலுவலர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். அதுபோன்ற சூழல்களில் தன்னிச்சையாக முடிவு எடுக்காமல், உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற வேண்டும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT