தமிழக செய்திகள்

ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பாக மூவர் குழு விரைவில் அறிக்கை வெளியிட உள்ளதாக அன்பில்மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறிய அவர்," மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு முதல்வர் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை கைவிடுங்கள். இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பாக மூவர் குழு விரைவில் அறிக்கை வெளியிட உள்ளது. மூவர் குழுவின் அறிக்கையின்படி இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் 5,781 ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று மத்திய பட்ஜெட்: தமிழ்நாட்டுக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

தமிழக சட்டமன்ற தேர்தல்: ‘இலவசம்’ வாக்குறுதிகளுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

பிரதமர் மோடி இன்று வரும் நிலையில் சீக்கிய அமைப்புக்கு வெடிகுண்டு மிரட்டல்

இன்று பட்ஜெட் தாக்கல்: மாநில அரசுகள் பதற்றத்துடன் காத்திருக்கின்றன - காங்கிரஸ்

ஐ.ஜி. அந்தஸ்து பெற 2 ஆண்டுகள் மத்திய பணி கட்டாயம் - மத்திய அரசு உத்தரவு