தமிழக செய்திகள்

கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் திருமானூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த அதே கிராமத்தை சேர்ந்த நாகராஜனின் மகன் சிவனேஸ்வரனை(வயது 19) பிடித்து கைது செய்தனர். அவர் வைத்திருந்த 2 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.