தமிழக செய்திகள்

லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

தஞ்சை அருகே உறவினர் மகள் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள மாட்டார் சைக்கிளில் வந்த போது காரில் மோதி கீழே விழுந்த வாலிபர், லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.

வல்லம்

பிறந்த நாள் விழா

புதுக்கோட்டை மாவட்டம் முரட்டு சோழகம்பட்டியை சேர்ந்தவர் முருகப்பெருமாள் (வயது36). இவர் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் உள்ள தனது மாமன் மகளின் முதலாவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இதேபோல் கறம்பகுடியை அடுத்த துவரங்கொள்ளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் காரில் செங்கிப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.

லாரி சக்கரத்தில் சிக்கி பலி

காரை செங்கிப்பட்டி-கந்தர்வக்கோட்டை சாலையோரம் டீக்கடையில் நிறுத்திவிட்டு டீக்குடித்துள்ளார். பின்னர் அவர் காரை எடுக்க வந்துள்ளார். அப்போது கார் கதவை திறந்த போது, முருகப்பெருமாள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், கார் மீது மோதியது. இதனால் முருகப்பெருமாள் கீழே விழுந்தார்.

அந்த நேரத்தில் பின்னால் ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி முருகப்பெருமாள் மீது ஏறி இறங்கியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

டிரைவர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகப்பெருமாள் உடலை கைப்பற்றி பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மலும் இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரவர் பாபநாசம் அருகே கூனஞ்சேரியை சேர்ந்த சுதாகர் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

விபத்து நடந்த காட்சி அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.உறவினர் மகள் பிறந்த நாள் விழாவுக்காக வந்த போது லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.