தமிழக செய்திகள்

வாகனம் மோதி வாலிபர் பலி

பழனி அருகே மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு வாகனம் மோதி வாலிபர் பலியானார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். அவருடைய மகன் சிவபெருமாள் (வயது 29). இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோவில் திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு சிவபெருமாள் சென்றிருந்தார். திருவிழா முடிந்து நேற்று இவர், தனது மோட்டார் சைக்கிளில் கோவைக்கு திரும்பி கொண்டிருந்தார்.

பழனி அருகே மானூரில், திண்டுக்கல்-பொள்ளாச்சி பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவபெருமாள் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவபெருமாள் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT