தமிழக செய்திகள்

வாகனம் மோதி வாலிபர் பலி

குடியாத்தம் அருகே வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 32), இவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஆனந்தன் கே.வி.குப்பத்தை அடுத்த கெம்மங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

குடியாத்தத்தை அடுத்த கோவிந்தாபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்ற வாகனம் திடீரென மோட்டா சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்தனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT