சென்னை,
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 8 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-
ஈரோடு – 39.8°C - 103.6°F
கரூர் பரமத்தி – 39°C - 102.2°F
மதுரை விமான நிலையம் – 38°C - 100.4°F
நாமக்கல் – 38°C - 100.4°F
பாளையங்கோட்டை – 39.1°C - 102.4°F
தஞ்சாவூர் – 39°C - 102.2°F
திருச்சி – 39.7°C - 103.5°F
வேலூர் – 38.9°C - 102.0°F