தமிழக செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் நாளை 4 மணி நேரம் நடை அடைப்பு..!

நாளை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில், நாளை ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவில் நடை அடைப்பு

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு வரும் 27-ம் தேதி (நாளை) மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன.

சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின்னர், மாலை 4 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் வழக்கம்போல் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். எனவே, நாளை மதியம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது தரிசன நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் க.ரமணி தெரிவித்தார்.