தமிழக செய்திகள்

தென்காசி அருகே கார் மோதி கோவில் பூசாரி பலி

அதிவேகமாக வந்த கார் மோதியதில் பூசாரி சீனித்துரை தூக்கி வீசப்பட்டார்.

தென்காசி,

கார் மோதியதில் கோவில் பூசாரி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சேர்ந்தவர் சீனித்துரை (வயது 56). இவர் கோவில் பூசாரியாக இருந்து வருகிறார். இன்று காலை கடையநல்லூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே அதிவேகமாக கார் ஒன்று வந்தது. இதனை கவனிக்காமல் சீனித்துரை சாலையை கடக்க முயன்றார். அப்போது அதிவேகமாக வந்த கார் சீனித்துரையின் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில், சீனித்துரை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த சீனித்துரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT