தமிழக செய்திகள்

சேலம் சீரகாபாடியில் காவகிரி பெருமாள் கோவில் தேரோட்டம்

சேலம் சீரகாபாடியில் காவகிரி பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

பனமரத்துப்பட்டி

சேலம் சீரகாபாடியில் உள்ள காவகிரி பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. முக்கிய வீதிகளில் உற்சவர் வீதிஉலா, சிறப்பு திருமஞ்சனம், திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT