நெல்லை,
தமிழகத்தில் வற்றாத ஜீவ நதியாக பாய்ந்தோடும் தாமிரபரணி ஆறு, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நதியைதூய்மைப்படுத்தவும், கரையோரங்களை மேம்படுத்தவும் ரூ.59.05 கோடி மதிப்பீட்டிலான புதிய மேம்பாட்டுப் பணிகளுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதியுதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த டெண்டருக்கான முன் ஏல ஆலோசனை கூட்டம் ஜூன் 29 காலை 11 மணிக்கு நடக்கும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 22 எனவும் நெல்லை மாநகராட்சி தெரிவித்துள்ளது.