சென்னை,
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதிகளை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுச்சதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா நடத்தியதாக மாநகராட்சி கமிஷனர் எஸ்.பாலச்சந்தர் மற்றும் அதிகாரிகள் மீது அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோருக்கு விரிவான புகார் மனு அனுப்பப்பட்டு உள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
சுமார் ரூ.45 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 2 பணிகளை, டெண்டர் செயல்முறை முடிவதற்கு முன்பே அதிகாரிகள் முடித்துள்ளனர். பெருங்க ளத்தூர் பாலம் ரவுண்டானாவில் அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிக்காக ரூ.27 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான டெண்டர் கடந்த ஆகஸ்டு 6-ந் தேதி வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதி ஆகஸ்டு 24-ந் தேதி ஆகும். ஆனால், டெண்டர் அறிவிப் புக்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, ஜூலை 29-ந் தேதியே இப்பணி முடிக்கப்பட்டு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சரத்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் திறப்பு விழா நடத்தப்பட்டு உள்ளது.
போலி டெண்டர்களை இணையதளத்தில்...
இதேபோல், சிட்லபாக்கம் ரவுண்டானாவில் தண்ணீர் சேமிப்பு விழிப்பு ணர்வு சிலை மற்றும் அழகுபடுத்தும் பணிக்காக ரூ.18 லட்சத்து 60 ஆயி ரம் மதிப்பிலான டெண்டர் ஆகஸ்டு 6-ந் தேதி வெளியிடப்பட்டது. இதற் கான டெண்டர் திறப்பு தேதி ஆகஸ்டு 24-ந் தேதி என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்டு 10-ந் தேதி சிலை திறக்கப்பட்டுள்ளது.இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட் டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் கமிஷனர் எஸ்.பாலச்சந்தர் கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை tntenders.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக அறப் போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (54.69 சதவீதம்) இணையதளத்தில் திறக்கப்படாமல் "To-be-opened" என்ற நிலையிலேயே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை அடைந்துள் ளது. இது நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையின்மையை காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் எஸ்.பாலச்சந்தரை தமி ழக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பதவி,
கூடுதல் பொறுப்பாக ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரண்யாவிடம் வழங்
கப்பட்டு உள்ளக