தமிழக செய்திகள்

தென்காசி: கோட்டை மலையில் பயங்கர தீ.. அரியவகை மூலிகைகள் கருகி நாசம்

அரிய வகை மூலிகைச் செடிகள் கருகியதாக கூறப்படுகிறது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் புளியங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கோட்டை மலை பீட் பகுதியில் திடீரென நேற்று மதியம் காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பல்வேறு இடங்களில் பரவி வருகிறது. தகவலறிந்த புளியங்குடி வனச்சரக அலுவலர் தலைமையில் வனத்துறையினர் 15-க்கும் மேற்பட்டோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த காட்டுத்தீயால் வனப்பகுதியில் காணப்படும் அரிய வகை மூலிகைச் செடிகள் கருகியதாக கூறப்படுகிறது. மேலும் வனவிலங்குகளும் பாதிப் புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.