தமிழக செய்திகள்

தென்காசி: ரெயிலில் அடிபட்டு வருவாய் ஆய்வாளர் உயிரிழப்பு - தற்கொலையா? போலீசார் விசாரணை

ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

தென்காசி,

தென்காசி ரெயில் நிலையத்தில் இருந்து கீழப்புலியூர் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று காலையில் ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உடல் துண்டாகி இறந்து கிடந்தார். இது பற்றி அறிந்த தென்காசி ரெயில்வே போலீசார் விரைந்து சென்று, இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் தென்காசி கீழப்பு லியூர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜூ புலிக்குட்டி மகன் திருப்பதி (வயது 48) என்பது தெரியவந்தது. இவர் ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி முத்துலட்சுமி, தென்காசி கல்வித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.

திருப்பதி, தென்காசி தாலுகா அலுவலகத்துக்கு பணி மாறுதல் கேட்டதாகவும், ஆனால் அவருக்கு கிடைக்காததால் விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நேற்று காலை 7.15 மணியளவில் செங்கோட்டையில் இருந்து நெல்லை செல்லும் பாசஞ்சர் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளார். எனவே அவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT