தமிழக செய்திகள்

தென்காசி: ஆசிரியைக்கு பாலியல் தொல்லை; உதவி தலைமை ஆசிரியர் கைது

தென்காசியில் ஒரு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர், அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

தென்காசி,

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் ஒரு பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பெரிய கோவிலாங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பஞ்சராஜா (வயது 56). இவர் அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

உதவி தலைமை ஆசிரியர் கைது

இதையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதவி தலைமை ஆசிரியர் பஞ்சராஜாவை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT