நாகை,
நாகையில்,எலக்ட்ரீசியன் ஒருவர் வீட்டில் சேமித்து வைத்திருந்த ரூ. 4 லட்சத்து 88 ஆயிரம் நோட்டுகள் கரையான்கள் அரித்ததில் நாசமாயின.
நாகை நீலா மேலவீதியை சேர்ந்தவர் பணத்தை இழந்தசெல்வ செல்வமுருகன் (வயது 30). எலக்ட்ரீசிய னான இவர், வெளியூர்களுக்கு சென்று முருகன் ஒப்பந்த அடிப்படையில் வேலைகளை செய்து வருகிறார்.
இவர், தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் உள்ள மர அலமாரியில் சேமித்து வைத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் சாதனங்கள் வாங்குவதற் காக சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க அலமாரியை திறந்தார். அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
வியர்வை சிந்தி, உழைத்ததன் மூலம் கிடைத்த ரூபாய் நோட்டுகள் கரையான்களுக்கு இரையாகி இருந்தன. அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.500, 200 மற்றும் 100 நோட்டுகள் என மொத்தம் ரூ.4 லட்சத்து 88 ஆயிரம், கரையான்களால் அரிக்கப்பட்டு செதில், செதிலாக கிழிந்து சிதறிக்கிடந்தன. ரூபாய் நோட்டுகளின் அடையாளம் அடியோடு மாறி இருந்ததை கண்டு செல்வமுருகன் கண்ணீர் வடித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
உழைத்து சம்பாதித்த பணத்தை கரையான்கள் அரித்து நாசமாக்கி விட்டன. சேதம் அடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக நாகையில் உள்ள வங்கிகளை அணுகியபோது, சென்னை ரிசர்வ் வங்கிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதன்படி சென்னை ரிசர்வ் வங்கிக்கு சென்று கேட்டபோது, சீரியல் எண்கள் இல்லாத நோட்டுகளை மாற்றுவதில் சிக்கல் இருப்பதாகவும், முழு தொகையும் திரும்ப கிடைக்கும் என உறுதி அளிக்க முடியாது என்றும் பதில் வந்தது. தாய், தந்தையை இழந்து நான் தனியாக வாழ்ந்து வருகிறேன். உழைத்து சம்பாதித்த பணத்தை முறைப்படி வங்கியில் சேமித்து வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வீட் டில் வைத்திருந்ததால் இத்தகைய இழப்பு ஏற்பட்டு விட்டது.
என்னைப்போல் வீட்டில் யாரும் ரூபாய் நோட்டுகளை வைக்க வேண்டாம். வங்கிகளில் சேமிக்க வேண்டும். கரையான்களால் சேதம் அடைந்த எனது முழு பணத்தையும் மீட்டுத்தர முதல்-அமைச்சர் உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எலக்ட்ரீசியன் ஒருவர் சேமித்து வைத்த பணம் கரையான்கள் அரித்ததில் நாசமானது அந்த பகுதியை சேர்ந்தவர்களிடையே மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.