நெல்லை,
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் ரஷிய நாட்டின் நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டு அணு உலைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 1,152 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கிறது. தொடர்ந்து கூடங்குளத்தில் 3-வது அணு உலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், சோதனை முறையில்அணு உலையை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அதன்படி கூடங்குளம் 3-வது அணு உலை சோதனை ஓட்டம் இன்று தொடங்கியுள்ளது. அணு உலைக்குள் நீர் பாய்ச்சும் பணி வெற்றிகரமாக தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அடுத்தகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.