திருமக்கோட்டையில் உள்ள பொன்னியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், மாரியம்மன் கோவில்களில் தை மாத கடைசி வெள்ளி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று மாலை 6 மணி அளவில் பொன்னியம்மன் மகாமாரியம்மன் புறப்பட்டு பிரகாரம் சுற்றி வைக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.