தமிழக செய்திகள்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: ஒரு கிராம் ரூ.0.01-க்கு வழங்கப்படுகிறதா? - தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்

ஒரு கிராம் தங்கம், ஒரு பைசாவுக்கு வழங்கப்படுவதாக முத்தரசன் தொடர்ந்து பேசி வருவதாக தகவல் நம்பகத்தன்மை பிரிவு தெரிவித்துள்ளது.

சென்னை,

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியான பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பரவும் செய்தி

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் ஒரு கிராம் தங்கம், ஒரு பைசாவுக்கு வழங்கப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் தொடர்ந்து பேசி வருகிறார்.

உண்மை என்ன?

இது முற்றிலும் தவறான தகவல்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தங்கத்தின் விலை தனியாகக் கணக்கிடப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையைத் தவிர்த்து, செய்கூலி, சேதாரம், காப்பீடு, போக்குவரத்து, பேக்கிங் மற்றும் BIS தரமுத்திரை போன்ற அனைத்து கூடுதல் கட்டணங்களும் சேர்த்து ரூ.0.01 என நிறுவனங்கள் குறைந்த விலைப்புள்ளியினை அளித்ததால் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.0.01 என்பது தவறான தகவலாகும்.

தவறான தகவலைப் பரப்பாதீர் !

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.