தமிழக செய்திகள்

தைப்பூசத் திருநாள்: த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து

அனைவர் இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றி வணங்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும். இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.