தஞ்சை,
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா பகுதியில் மதுபானங்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 சேர்த்து விற்பனை செய்தது காரணமாக டாஸ்மாக் பணியாளர்கள் 6 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு டாஸ்மாக் கடையில் வெளிநபர்கள் பணிபுரிந்து வந்ததும், மதுபானங்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 சேர்த்து விற்பனை செய்ததும் வீடியோவாக வெளிவந்தது.
கடை பணியாளர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு தனது தலையாய பணியை செய்ய தவறியதன் காரணமாக மேற்பார்வையாளர்கள் செந்தில்குமார், சேகர், சரவணன், விற்பனையாளர்கள் துரைபிரகாஷ், மதியழகன், வீராசாமி ஆகிய 6 பேரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது.