சென்னை,
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே காணாமல் போன பிளஸ் 2 மாணவி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா் . கடந்த 30ம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகளை காணவில்லை என போலீசில் அவரது தாய் புகார் அளித்து இருந்தார்.
இந்நிலையில் காணாமல் போன மாணவி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.